கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்.!
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு இணங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

