உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எரிசக்தி போர்நிறுத்தத்தை மீறிய ரஷ்யா! : ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!!

உலக செய்திகள் 4 நாட்கள் முன்
92 பார்வைகள்

யுக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள அனல் மின் நிலையம் மீதான தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த எரிசக்தி தாக்குதல் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

எந்தவொரு ஒப்பந்தத்தையும் கடைப்பிடிப்பதற்கான உறுதியினை அமெரிக்கா வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கு முன்னதாக எரிசக்தி விலைகள் தொடர்பில் அழுத்தத்தில் இருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் யுக்ரேனும் ரஷ்யாவும் எரிசக்தி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டதால், யுக்ரேன் சீற்றமடைந்தது.

அதேவேளை, போர் நிறுத்தம் குறித்து அதன் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்ட நிலையில், ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதுடன், ரஷ்யாவின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை இலக்காகக் கொண்ட புதிய தடைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஒருதலைப்பட்சமாக நிறுத்துமாறு யுக்ரேனை நிர்ப்பந்திப்பதன் மூலம் ரஷ்யாவிற்கு சாதகமாக அமையக்கூடும் என யுக்ரேன் கருதுகிறது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தின் விபரங்களுக்காகத் தாம் காத்திருப்பதாக வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த எரிசக்தி தாக்குதல் நிறுத்தத்தை ரஷ்யா மீறியுள்ளது, என வாசோவில் நடந்த ஒரு மாநாட்டில் காணொளிக் காட்சி மூலம் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து தாம் ஊடகங்களின் ஊடாகவே தகவல்களை பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0