போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48 வயதுடைய ஆண்களும், 43 மற்றும் 52 வயதுடைய பெண்களும் ஆகும்.
நேற்று (12) மாலை கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றிலும், பிரதான வர்த்தக வளாகம் ஒன்றிலும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 1 கிலோகிராம் 49 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும் இரண்டு பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

