உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
84 பார்வைகள்

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவை பழிவாங்கும் நோக்கிலேயே இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரைக் கைது செய்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை அரசு திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது. எனினும், அரசின் இவ்வாறான சர்வாதிகாரச் செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு சிங்கள பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது. இதற்குச் சிங்கள பௌத்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார். எனவே, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0