உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
108 பார்வைகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.

அவர்களுக்கு 30 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் தங்களது வருமான நோக்கத்தை மட்டுமே கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

தனியார் களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பினும் அதனை விநியோகிக்காமல் உள்ளனர்.

இது தவறான செயலாகும். இதுபோன்ற செயற்பாட்டையே ஏனைய தனியார் எரிவாயு நிறுவனங்களும் செய்கின்றன.

அரச நிறுவனத்தினால் வழங்க முடிகின்ற போது, ஏன் தனியார் நிறுவனங்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை?

போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய செயற்பாடுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் பயன் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மட்டுமே கொண்ட நகரங்களும் நாட்டில் உள்ளன.

அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனத் தெரிவித்தால், அங்குள்ளவர்களின் நிலைமை என்னவாகும்?

இந்தநிலைமையின் பாரதூரமான தன்மையை அறிந்தே நாம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.

எனவே, இவ்வாறான காரணிகளின் அடிப்படையிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0