உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
94 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று (12) மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி. வலன்டைன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும், உதவிக் கல்விப் பணிப்பாளின் வழிகாட்டுதலிலும், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்புடனும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால கல்வி பயணத்திற்கு ஊக்கமளிப்பதையும், ஏனைய மாணவர்களையும் சிறந்த கல்விச் சாதனைகளை நோக்கி முன்னேற தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கமளிக்கும் இத்தகைய முயற்சிகள் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வலுச் சேர்க்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0