உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாமர சம்பத் தசநாயக்க கைது.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
110 பார்வைகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்துவரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் பாஸ்பேட் ஏற்றுமதி செய்யும் பிரத்தியேக அனுமதியை வழங்குவதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான பாஸ்பேட் ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் உதவியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் இராஜாங்க அமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்த காலத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளராகச் செயற்பட்ட சுமதிபால லியனாராச்சியும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0