உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஸ்வெசும பணத்தை நாங்களே திருடினோம்; தவறை ஒப்புக்கொண்ட பிரதேச செயலக ஊழியர்கள்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
89 பார்வைகள்

அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதியைத் தங்களது பெயர்களிலும், உறவினர்களின் பெயர்களிலும் மோசடியாகப் பெற்றுக்கொண்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள், முறையான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தாம் செய்த தவறைப் பிரதேச செயலாளரிடம் சுயவிருப்பத்தின் பேரில் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறித்த பிரதேச செயலகத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், 2023ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியைத் தங்களது பெயர்களுக்கும், நெருங்கிய உறவினர்களின் பெயர்களுக்கும் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு, நோர்வூட் பிரதேச செயலாளர் எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு பெயர்ப்பட்டியல் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தாம் இழைத்த மோசடி தொடர்பில் பிரதேச செயலாளரிடம் நேரில் சென்று ஒப்புக்கொண்டுள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிதி மோசடியுடன் தொடர்புடைய அஸ்வெசும பிரிவின் அதிகாரிகள் இருவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இரு அதிகாரிகளினாலும் அஸ்வெசும நிதி வைப்பிலிடப்பட்ட அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0