உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு; முபாறக் முஅஸ்ஸம் உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
55 பார்வைகள்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்ட ரீதியாக வழக்கை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இவ்வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P) தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடனான விசேட கலந்தரையாடல் சம்மேளனக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது வழக்கின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை, ஏனைய முன்னெடுப்புகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகச் சமேளனத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் விரிவாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகக் குடும்ப உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்துச் சம்மேளனப் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தினார்.

பல்லாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்வழக்கினை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவ்வித பிரதிபலன்களையோ அல்லது பலாபலன்களையோ எதிர்பாராமல் தன்னார்வமாகச் செயற்பட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நிகழ்வில் முதன்மை உரையாற்றினார்.

வழக்கின் ஆரம்பகட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு அவர் தெளிவுபடுத்தியதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தார்.

குறித்த வழக்கோடு சத்தியக்கடதாசி மூலம் இணைந்து கொண்டுள்ள பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களின் உறுப்பினர்கள், தம்மை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும், தமது நலன்களைப் பாதுகாத்துத் தொடர்ந்தும் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தமது சுய விருப்பின் அடிப்படையில் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் சத்தியவோலையினைச் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.

இதற்கமைய, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமினாலும், அவரோடு இணைந்து அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் சட்டத்தரணிகளினாலும் மட்டுமே இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0