உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தெஹிவளை சென்டோவின் பிரதான துப்பாக்கிதாரி கைது; விசாரணையில் பல கொ**லைகள் அம்பலம்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
57 பார்வைகள்

வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள ‘தெஹிவளை சென்டோ’ எனப்படும் பாதாளக் குழு உறுப்பினரின் பிரதான ஒப்பந்தத் துப்பாக்கிதாரி, ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாவைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவைப் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதித் தடைச் சோதனையின் போதே 10 ஆயிரத்து 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்தச் சந்தேகநபர் பிடிபட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இலங்கை விமானப் படையிலிருந்து தப்பியோடிய முக்கிய ஒப்பந்தத் துப்பாக்கிதாரி என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்ட போது, இவர் தெஹிவளை மற்றும் கல்கிஸை பகுதிகளில் இடம்பெற்ற இரு மனிதப் படுகொலைகள் தொடர்பில் நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாகியிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்கல மாவத்தையில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டவரும் இவரே என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோமாகம – கொட்டாவ வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்துக்கமைய, எதிர்வரும் நாட்களில் கல்கிஸை பகுதியில் படுகொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தமை, பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0