உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த மதத்தை வைத்து இனவாதத்தை கிளறச் சதி.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
71 பார்வைகள்

சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்று கூறிக்கொண்டு நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருதரப்பினர் முயல்கின்றனர் என்றும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே ஞானசார தேரருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சட்ட விதிகளின் பிரகாரமே அவரது காவியுடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.

ஞானசார தேரர் விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் குறுகிய அரசியல் இலாபத்துக்காக இனவாதக் கோணத்தில் திசைதிருப்பி வருகின்றன.

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் போது ஜனாதிபதி நீதித்துறை அதிகாரத்தில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதியைத் தலையிடுமாறு அழுத்தம் கொடுப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றது.

பௌத்த மதத்தை முன்வைத்து மீண்டும் இனவாதத்தைக் கிளற எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் இத்தகைய செயற்பாடுகள் கீழ்த்தரமானவை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0