உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் ப@லி, 11 பேர் காயம்!

உலக செய்திகள் 5 நாட்கள் முன்
110 பார்வைகள்

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘மன்னர் காலித்’ சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் 4 ஆம் இலக்க பயணியர் முனையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாகப் படைகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சனிக்கிழமை இதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 308 பேர் காயமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதுடன், பெலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.

மேலும், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களைத் தவிர்த்து, சவூதி அரேபியாவின் அனைத்து விமான நிலையங்களும் தங்களது இலக்குகளாக மாறும் என்றும், சவூதிக்குள்ளான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தெரிவித்துள்ளார்.

ரியாத் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக, கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் சவூதி அரேபியாவின் அப்ஹா (Abha) மற்றும் ரியாத் விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் ஆகியோர் இந்தத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சவூதி அரேபியாவுக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

யேமனில் 2022 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் கடந்த ஜூலை மாதம் முறிந்ததைத் தொடர்ந்து, சவூதி எல்லைப் பகுதிகளில் மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் மறைமுக ஆதரவு உள்ளது. யேமனின் எல்லைப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அரசு உருவாவதை சவூதி அரேபியா தனது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனால் பிராந்திய வல்லரசு ஆதிக்க மோதலின் ஒரு பகுதியாகவும் சவூதி – ஹூதி மோதல் தொடர்கிறது.

யேமனின் தலைநகரான சனா (Sanaa) விமான நிலையத்தின் ஓடுதளம் மீது சவூதிப் படைகள் தாக்குதல் நடத்தியதை ஹூதிகள் தங்களது பகுதி மீதான ‘முற்றுகை’ (Siege) எனக் கருதுகின்றனர்.

இதற்குப் பதிலடியாகவே சவூதியின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவதாக ஹூதிகள் கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0