உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது; இந்திய உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கின்றார் ஜனாதிபதி அநுர.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
114 பார்வைகள்

“இலங்கையின் ஆள்புல எல்லை, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள விடயம் வரவேற்கத்தக்கது. பிளவுபடாத வெளிவிவகாரக் கொள்கையுடன் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ‘நமது அரசு: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஈரான் கப்பல் விவகாரத்தில் நாங்கள் எடுத்த தீர்மானத்தை முழு உலகமும் வரவேற்றது. இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மையை முன்னிலைப்படுத்தி ஈரான் கப்பல் விவகாரத்தில் தீர்மானம் எடுத்தோம்.

ஆசிய வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இலங்கையின் ஆள்புல எல்லை, வான் மற்றும் கடற்பரப்பை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்த எந்தத் தரப்புக்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் கச்சதீவைத் தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக்குவதாகத் தமிழக மாநிலத் தேர்தலின்போது முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். எவருடனும் முரண்படத் தேவையில்லை. பிளவுபடாத, உறுதியான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றுகின்றோம்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது. நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப் பகுதியில் நாட்டில் எவ்வித இன முரண்பாடுகளும் இடம்பெறவில்லை. இதுவே எமது பாரிய வெற்றியாகும்.

கடந்த காலங்களில் சிங்கள அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வருவதற்காக இன முரண்பாட்டை ஏற்படுத்தினார்கள். தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் மோதவிட்டார்கள். அதனூடாக நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தில் முரண்பட்டுக் கொள்ளவில்லை.

30 வருடகால யுத்தம் இந்த நாட்டில் பாரியதொரு இழப்பை ஏற்படுத்தியது. யுத்தத்தால் எழுந்த கேள்விகளுக்கு இன்றளவில் பதில் கிடைக்கவில்லை. ஆகவே, இன முரண்பாடு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது மாபெரும் வெற்றியாகும். அந்த இலக்கை நிச்சயம் அடைவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0