உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான விசாரணைகள் நிறைவு; நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் இறுதி அறிக்கை.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
101 பார்வைகள்

கொழும்புத் துறைமுகத்திலிருந்து கட்டாய பௌதீகப் பரிசோதனை எதவுமின்றி 323 சரக்குக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது விசாரணைப் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது. அதன் இறுதி அறிக்கையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.

அறிக்கை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அது முதலில் குழுவின் உறுப்பினர்களிடையே பகிரப்பட்டு, அவர்களின் பரிந்துரைகளையும் உள்ளடக்கியே இறுதி வடிவம் பெறவுள்ளது.

எந்தவித கட்டாய சுங்கப் பரிசோதனைகளுமின்றி இவ்வளவு பெரிய அளவிலான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, இலங்கை சுங்கம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் விடுவிப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தது.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்களுக்குள் போதைப்பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் எவையேனும் அடங்கியிருக்கலாம் என எதிர்க்கட்சியினர் எழுப்பிய தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0