உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருள், பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 5 இலட்சத்து 74 ஆயிரம் பேர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
97 பார்வைகள்

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடனான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 இலட்சத்து 74 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழுவினர் பலர் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பகுதியாக, குற்றவாளிகளிடமிருந்து 3 ஆயிரத்து 980 சட்டவிரோதத் துப்பாக்கிகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

தகுதியின் அடிப்படையில் எந்தவொரு நபருக்கும் விலக்களிக்காமல், முறைகேடுகள் மற்றும் பொது நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோசடியாளர்கள் எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்களின் அமர்வு நேரங்களும் நீடிக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0