உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உடனடி ‘மின்சக்தி போர்நிறுத்தம்’ : ட்ரம்ப் அறிவிப்பு!

உலக செய்திகள் 5 நாட்கள் முன்
107 பார்வைகள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போரில், இரு நாடுகளின் மின்சாரம் உள்ளிட்ட சக்திசார் உட்கட்டமைப்புகள் (Energy Infrastructure) மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துவதற்கான ‘மின்சக்தி போர்நிறுத்தத்திற்கு’ (Energy Ceasefire) இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இந்தத் தீர்மானம் உடனடியாகச் அமுலுக்கு வருவதாகவும், இரு நாடுகளும் இதற்குக் முழுச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக யுக்ரைனின் மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தி வந்தது.

இதனால் அங்கு தீவிர மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் இந்த மத்தியஸ்த முயற்சி போர்ச் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0