உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர், ஊழியர்களின் அசமந்தப் போக்கு: நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச சபை உறுப்பினர் கடிதம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
56 பார்வைகள்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது நேரடியாக எதிர்கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று (09.10.2026) அவர் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026.10.08 அன்று பிற்பகல் 1.40 மணியளவில், முள்ளியவளை நீராவிப்பிட்டியில் வசிக்கும் தனது சகோதரரான ஞானதாஸ் யூட்நிசான் தச்சுப் பட்டறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இயந்திரத்தால் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு வெளிநோயாளர் பிரிவில் கடமையிலிருந்த சந்திரமோகன் என்ற வைத்தியரை அணுகி சிகிச்சை வழங்குமாறு கேட்டபோது, பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே நோயாளியைப் பார்வையிட முடியும் எனத் தெரிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.40 மணி முதல் 1.55 மணி வரை குறித்த வைத்தியர் அங்கு இருந்தபோதிலும், காயமடைந்த தனது சகோதரரைப் பார்வையிட மறுத்ததாகவும், பின்னர் பிற்பகல் 2.05 மணியளவில் பிரியா என்ற வைத்தியரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து, தனது சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தான் நேரடியாக வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று, அங்கு கடமையிலிருந்த சந்திரமதி என்ற ஊழியரிடம் முன்னர் கடமையிலிருந்த வைத்தியரின் பெயரைக் கேட்டபோது, பெயரைக் கூற முடியாது என்றும், வேறு இடத்தில் சென்று விசாரிக்குமாறும் கடுமையான தொனியில் பதிலளித்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகள் காரணமாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வைத்தியசாலைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் உரிய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் கேள்வி
வைத்தியசாலையின் நிர்வாகச் சீரின்மையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா அல்லது தலைமைத்துவம் மற்றும் ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களிடையே எழுந்துள்ள இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், திலகநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான…

6 0 0
இலங்கை செய்திகள்

மருதமுனை கடற்கரையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த…

60 0 0
இலங்கை செய்திகள்

2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக யாழ்ப்பாணம் உருவாகும்!

இலங்கை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கு ஹலோட்ரஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஹலோட்ரஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் Hannah Picton தெரிவிப்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலைக்காகத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன்! : சஜித் உருக்கம்!!

இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் காணி மற்றும்…

64 0 0