அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
விஜய்யின் இந்த அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை மாவட்ட மற்றும் தொகுதி வாரியாகப் பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், அவர் தனது கட்சிக்கு ‘தமிழக எழுச்சிக் கழகம்’ எனப் பெயரிட்டுத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாகத் தனது நிலைப்பாட்டை விரைவில் வெளியிடவுள்ள தனுஷ், கட்சியின் கொடி, கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ரஜினிகாந்தின் ஆதரவுடன் அவர் 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.