உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

சினிமா 15 மணி நேரம் முன்
146 பார்வைகள்

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கண்ணன் மீது இயற்றிய பக்திப் பாடலுக்கு, இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான தேவன் ஏகாம்பரம் மற்றும் கர்நாடக இசைப் பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜன் ஆகியோர் இணைந்து நவீன இசை வடிவம் கொடுத்துள்ளனர்.

இந்தப் பாடல் 69ஆவது கிராமி விருது விழாவின் ‘சிறந்த உலகளாவிய இசைப் படைப்பு’ (Best Global Music Performance) பிரிவில் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சுயாதீன இசைப் படைப்பாக வெளியான ‘வருவாய்’ பாடல், பாரதியாரின் காலத்தால் அழியாத வரிகளை கர்நாடக இசையுடன் நவீன இசைக்கருவிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தேஷ் ராகத்தில் அமைந்துள்ள இப்பாடலுக்கு அனில் ஸ்ரீனிவாசன் பியானோவும், பிரகாஷ் சோன்டக்கே ஸ்லைட் கிட்டாரும், நவீன் சாம்சன் ஒலியிசைக் கிட்டாரும், ஜோ ஜான் பேஸ் கிட்டாரும், சர்வஜித் கிருஷ்ணா தபேலாவும் இசைத்துள்ளனர்.

இந்தப் பாடல் பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜனுக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாகும். அவரது தாயார் லட்சுமி ரங்கராஜன், இசைக் கச்சேரியொன்றில் இப்பாடலைக் கேட்டு ஈர்க்கப்பட்டு, அதனைக் கற்றுக்கொண்டு தனது மகளுக்கும் கற்பித்துள்ளார்.

தேவன் ஏகாம்பரம், ‘காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ மரியா’, ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரே ஞாபகம்’ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். அத்துடன், ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு அவரது ‘A Walk Through Brindavan’ இசைப் படைப்பு கிராமி விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், ‘வருவாய்’ பாடல் மூலம் தற்போது அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

69ஆவது கிராமி விருதுக்கான போட்டி

சிறந்த உலகளாவிய இசைப் படைப்பு பிரிவில் ‘வருவாய்’ பாடலுடன் சர்வதேச இசைக் கலைஞர்களின் படைப்புகளும் போட்டியிடுகின்றன.

  • வருவாய் – தேவன் ஏகாம்பரம் மற்றும் சுபிக்‌ஷா ரங்கராஜன்
  • Bando [Orchestral] – ஏஞ்சலிக் கிட்ஜோ, ஃபாரெல் வில்லியம்ஸ் மற்றும் குவாவோ
  • Dai Dai – ஷகீரா மற்றும் பர்னா பாய்
  • Porcelana – ரோசாலியா மற்றும் டூகி எஃப்
  • Una Flor En Cada Estrella – கெர்ரேகே, மிரேயா ராமோஸ் மற்றும் அலெக்ஸ் இ சாவேஸ்

கிராமி விருது வழங்கும் விழா எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி அமெரிக்க நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பெப்ரவரி 8ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளது.

தமிழ் இசை உலகளாவிய அரங்கில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், ‘வருவாய்’ பாடலுக்கு கிராமி விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

129 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

130 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

99 0 0
சினிமா

தனுஷுடன் செல்ஃபி எடுக்க முட்டிபோட்ட ரசிகர் : சர்ச்சையில் சிக்கிய நடிகர்!

நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் முட்டிபோட்டு முயற்சித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது,…

103 0 0