உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவின் புதிய ஆளில்லா விமானம் “அக்னி கலஷ்” அறிமுகம்

இந்திய செய்திகள் 5 மணி நேரம் முன்
68 பார்வைகள்

இந்தியாவின் புதிய போர் ட்ரோன் அக்னி கலஷ் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, PanIIT Andhra Pradesh Summit 2026 மாநாட்டில், இந்தியாவின் புதிய போர் ட்ரோன் அக்னி கலஷை (Agni Kalash) அறிமுகப்படுத்தினார்.

இந்த ட்ரோன், ஹைதராபாதை தளமாகக் கொண்ட AKSI Aerospace Group நிறுவனத்தின் DronAgni Combat Drones Pvt Ltd மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அக்னி கலஷ் என்பது நீண்ட தூர போர் UAV (Unmanned Aerial Vehicle) ஆகும். மனிதர் இல்லாமல், துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேகம்: மணிக்கு 350 கி.மீ வரை செல்லும் திறன்.

வடிவமைப்பு: Modular Architecture அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், பல்வேறு பணிகள் மற்றும் Payloads க்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

GPS இன்றி இயங்கும் திறன்: சுயமாக வழிநடத்தும் தொழில்நுட்பம் கொண்டதால், GPS இல்லாமல் கூட செயல்பட முடியும்.

Payload, வானிலை, Flight Profile போன்ற காரணிகளின் அடிப்படையில், ட்ரோனின் செயல்திறன் மாறுபடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோன் அறிமுகம், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில், அக்னி கலஷ் இந்திய இராணுவத்தின் துல்லியமான தாக்குதல் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ : பிரதமர் மோடி நம்பிக்கை

அரசுத் தலைவராகத் தனது 25 ஆண்டுகாலப் பணிக்காலத்தை இன்று (07) நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ (விக்சித் பாரத்)…

47 0 0
இந்திய செய்திகள்

இலங்கையின் எல்லைக்குள் நுழைய வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (06) வாய்மொழியாகக் குறிப்பிட்டது.…

60 0 0
இந்திய செய்திகள்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

62 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் இன்று

தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(06) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு…

94 0 0