உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறைக்க வேண்டும்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
83 பார்வைகள்

அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்து, இரு நாடுகளுக்குமிடையிலான ஏழு மாத போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனில் குறிப்பிடத்தக்க குறைப்பைச் செய்ய வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்து அமெரிக்கா இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா ஈடுபடுவதை நீண்டகாலமாக எதிர்த்து வரும் வான்ஸ், இந்த மோதலுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னணிப் பாத்திரத்தை வகித்துள்ளார்.

அத்துடன், ஜூன் மாதத்தில் அவர் இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

எனினும் அது விரைவிலேயே முறிவடைந்தது. இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கியுள்ளதோடு, நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சக குடியரசுக் கட்சியினருக்கு அரசியல் ரீதியான ஒரு பின்னடைவாகவும் மாறியுள்ளது.

அலாஸ்காவிற்கான தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்குப் பிறகு திங்கள்கிழமை பேசிய வான்ஸ், எதிர்காலத்தில் அணுஆயுதக் குறைப்புச் செய்யப்படும் என்ற உறுதியை அளிப்பதை விட, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரான் தனது அணுச்செறிவூட்டல் திறனைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உங்களுக்கு அணுஆயுதம் தேவையில்லை என்றால், 60% செறிவூட்டப்பட்ட எரிபொருள் ஏன் தேவைப்படுகிறது? அணுஆயுதத்தைத் தயாரிக்க மாட்டோம் என்ற அர்ப்பணிப்பைக் காட்ட விரும்பினால், அதிகளவில் செறிவூட்டப்பட்ட எரிபொருளைத் தயாரிக்காதீர்கள். இது மிகவும் அடிப்படையான ஒரு முக்கிய விடயமாகும் என வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சர்வதேச பருந்துக் கண்காட்சியும், ஏலமும் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது

சவூதி அரேபியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய உரிமையான பருந்து (Falconry) பயிற்சி மற்றும் அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச பருந்து கண்காட்சி மற்றும்…

77 0 0
உலக செய்திகள்

மீண்டும் பரவும் பிளேக் நோய்த் தொற்று? : அச்சத்தில் உலக நாடுகள்!

பிளேக் (Plague) நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ரஷ்ய அதிகாரிகளிடம் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தகவல் கோரியுள்ளது. ரஷ்ய…

93 0 0
உலக செய்திகள்

நைஜீரியாவில் இராணுவ வானூர்தி விபத்து : 25 பயணிகள் உட்பட 32 பேர் உயி@ரிழப்பு!

நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த அந்த நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமான ஏடிஆர்-42 (ATR-42) ரக வானூர்தி தென்மேற்கு மாநிலமான ஓண்டோவில் விபத்துக்குள்ளானதில், 25 பயணிகள்…

65 0 0
உலக செய்திகள்

செங்கடலின் கரையோரத்தில் யேமன் அரச படைகள் தீவிர இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் யேமன் அரசாங்கம், செங்கடல் கரையோரப் பகுதிகளில் முக்கிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பொப் அல்-மந்தப் நீரிணை முதல் மொக்கா நகரம்…

89 0 0