ஆலய உற்சவத்தில் வெடி விபத்து; சிறுவன் உ*யிரிழப்பு.!
மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைக்கப்பட்ட பெரிய வெடியொன்று வெடிக்காத நிலையில், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயது சிறுவன் அது திடீரென வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான் கூளாக்காடு பகுதியைச் சேர்ந்த 13 வயது என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
ஆலய உற்சவத்தின் இரவுப் பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடியொன்று வெடிக்க வைக்கப்பட்ட நிலையில், அது வெடிக்கவில்லை. இதனால் அவ்வெடி தூக்கி வீசப்பட்டுள்ளது.
வெடிக்காத அந்தப் பெரிய வெடியைப் பார்ப்பதற்காகச் சிறுவன் அருகில் சென்றபோது அது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
வெடி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




