உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதி அநுரகுமார மன்னார், முல்லைத்தீவுக்கு பயணம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
42 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இரு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பு, தேவையான உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

84 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

89 0 0
இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப்…

92 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

97 0 0