உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
120 பார்வைகள்

இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து 67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய ‘சாஹித்யரத்ன’ கௌரவ விருதுகள் மூன்று மொழிப் படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.

சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர் மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன், நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

110 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

103 0 0