தந்தையை கொ*லை செய்த மகன்.!
மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.