உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
52 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளை திங்கட்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமியின் சோகமான படுகொலையே செம்மணி மனிதப் புதைகுழி கண்டறியப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 600 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக, போதிய நிதியுதவியுடன் கூடிய சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்றும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமலின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும்.!

“நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச, ஊழல் விசாரணை…

24 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது சட்டவிரோதமானது.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது பெறப்பட்டதாகக் கூறப்படும் கமிஷன் பணத்தில், 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்ஷ பெற்றார் என்ற குற்றச்சாட்டின்…

40 0 0
இலங்கை செய்திகள்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய…

53 0 0
இலங்கை செய்திகள்

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையைக் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும்.!

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான…

54 0 0