உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

அடேங்கப்பா… அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

சினிமா 2 மணி நேரம் முன்
51 பார்வைகள்

இசையமைப்பாளர் அனிருத்திற்கு புதிய திரைப்படமொன்றுக்காக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘AA23’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

அல்லு அர்ஜுனின் 23ஆவது திரைப்படமாக உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘AA23’ திரைப்படத்திற்காக அனிருத்திற்கு ரூ.20 கோடி முதல் ரூ.23 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்ற போதிலும், குறித்த தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இந்திய திரையுலகில் இசையமைப்பாளர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகூடிய சம்பளங்களில் ஒன்றாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அனிருத் தற்போது பல முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் ‘அரசன்’, ‘கிங்’, ‘பாரடைஸ்’ மற்றும் ‘தர்மன்’ உள்ளிட்ட திரைப்படங்களும் அவரது கைவசம் உள்ளன.

அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் முதன்முறையாக இணையும் ‘AA23’ திரைப்படம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க (ரீ-ஷூட்) படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

35 0 0
சினிமா

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

46 0 0
சினிமா

“உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்” – சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள்…

63 0 0
சினிமா

நன்கு ஈழத்தமிழ் பேசத் தெரியும் : ஜெசன் சஞ்சய் வெளிப்படை

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்றும், தமிழையும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

114 0 0