ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல் தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவல் தொழிநுட்பம், ஆலோசனை சேவைகள், வணிகச் செயன்முறைகளை வெளிவாரியாகப் பெற்றுக் கொள்ளல், விநியோக சேவைகள் (லொஜிஸ்ரிக்), உட்கட்டமைப்பு வசதிகள் இரட்டைஃகூட்டிணைந்த வணிகக் கட்டமைப்புக்கள் மற்றும் பொது வணிகங்கள் மற்றும் வணிகத் துறைகளுக்குரிய 68 வணிக நிறுவனங்களை இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக பெயரிடுவதற்கு 2026.03.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த 68 வணிகங்களையும் இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக பெயரிட்டு 2026.04.10 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.