உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கஞ்சாவை கடத்திச் சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 9 நிமிடங்கள் முன்
97 பார்வைகள்

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் வாகனமொன்றில் உலர்ந்த கஞ்சாவைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான மகிழுந்து ஒன்று வழிமறித்துச் சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த மகிழுந்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மகிழுந்தில் பயணித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரும், இந்தக் கஞ்சாவை சுற்றிவளைப்பு ஒன்றின் போது கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில் அத்தகையதொரு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டமைக்கோ அல்லது கஞ்சாத் தொகையைக் கொண்டு செல்வதற்குச் சட்டபூர்வ அனுமதி பெறப்பட்டமைக்கோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகளும், அவர்களுடன் பயணித்த மற்றைய சந்தேகநபரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று திங்கட்கிழமை (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் ஹம்பேகமுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் அரசுக்கு எதிராக அரச ஊழியர்கள் போர்க்கொடி.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அந்தவகையில்…

122 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை…

104 0 0
இலங்கை செய்திகள்

யாழில் உ**யிரிழந்த நிலையில் ஒருவர் மீட்பு.!

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக…

148 0 0
இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

133 0 0