உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

அநுரவின் தலைமைக்கு ஈடுகொடுக்க எதிர்க்கட்சிகளில் எவருமே இல்லை.!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
44 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து அரசியலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகளில் எவரும் இல்லை என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாடு கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டபோது, தைரியமாகப் பொறுப்பேற்று நாட்டை மீட்சிப் பாதையிலும் ஸ்திரத்தன்மையிலும் வழிநடத்தியவர் தற்போதைய ஜனாதிபதி மட்டுமே. அவருக்கு அரசியல் ரீதியாகச் சவால் விடுக்கக்கூடிய தகுதியான தலைவர் எதிர்க்கட்சிகளில் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவர்.

22ஆவது அரசமைப்புத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. இந்தத் திருத்தம் அரசின் சுயநலத்துக்காகவோ அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகவோ கொண்டுவரப்படவில்லை. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்தவுமே இது கொண்டுவரப்பட்டது.

நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சியினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு முன்னெடுக்கும் அனைத்துச் சீர்திருத்தங்களும் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையுமே மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,…

24 0 0
இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

37 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

19 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0