உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
37 பார்வைகள்

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.

பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

28 0 0