நேபாள வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 700 ஐ தாண்டியது
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, குறித்த பேரழிவில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 16-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 900 ஊழியர்களுக்குச் செயற்கையாகக் காற்று செலுத்தப்பட்டு முயன்றபோதிலும் அவர்களுடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் அவசரகாலப் பணியாளர்கள் திணறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட சுமார் 3,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் வைத்தியசாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சடலங்களைச் சமாளிக்க நேபாள அதிகாரிகள் போராடி வரும் சூழலில், காணாமல் போன பயணிகளை மீட்கும் பொருட்டு அமெரிக்கா தனது மனிதாபிமான உதவியை உயர்த்தியுள்ளது