உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
56 பார்வைகள்

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டு அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்தது.

அன்றைய தினம் அந்தப் பிரச்சினைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தியவுடன், அரசாங்கம் இந்த இரு தரப்பினரையும் கண்டி ‘சஹஸ் உயன’ பகுதிக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது. இருப்பினும், தற்போதும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் பங்கேற்ற இந்த சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த தேர்தல் சமயங்களில் இந்த இரு குழுக்களையும் நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.

சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை திசைதிருப்பியதாக குறித்த உறுப்பினர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் இந்த சங்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், இவர்களுக்கான உரிய சேவைப் பிரமாணக் குறிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது என அவர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பெயர் மாற்றுவதை மாத்திரமே இந்த அரசாங்கம் நல்லாச் செய்துள்ளது. சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கு மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அந்தச் சட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் இருந்து வாக்குகளைப் பெறுவதற்காக பல பொய்களும் வாக்குறுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று அவை அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அரசாங்கம் இந்தத் தரப்பினரை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0