உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
45 பார்வைகள்

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன்போது, தேடப்பட்டு வந்த மூன்று சீன பிரஜைகளை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்நிலையில், சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

58 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

91 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

65 0 0