உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
36 பார்வைகள்

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன என்பது கூட இந்த அரசுக்குத் தெரியவில்லை. இவ்வாறான வழக்குகள் அனைத்தும் நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை ஆரம்பத்தில் உயர் நீதிமன்றத்துக்கே கொண்டுவரப்பட்டது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவே, பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அதன் கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதில் 10 ஆயிரம் வரையிலான வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ளன. எஞ்சிய 10 இலட்சத்து 90 ஆயிரம் வழக்குகள் அனைத்தும் கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், கடந்த எட்டு மாதங்களாக அரசு அந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது. அதை முறைப்படி நிரப்பாமல், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் நீதிமன்றப் பிரச்சினைகளுக்கோ அல்லது மோசடிக்காரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ எந்தவொரு தீர்வும் கிடைக்காது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0