உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மருத்துவ பரிசோதனையின் பின் இம்ரான் கான், மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்

உலக செய்திகள் 29 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் “மருத்துவ ரீதியாக நலமாக உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கண் மருத்துவர், இதய மருத்துவர் மற்றும் ஒரு பொது மருத்துவர் உள்ளிட்ட “தகுதிவாய்ந்த மருத்துவர்கள் குழு” கானைப் பரிசோதித்ததாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் கூறியுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்த முறைப்பாடுகளை தொடர்ந்து, 48 மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களால் பரிசோதிக்க வேண்டும் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டிருந்தது.

எனினும் இறுதியில் அவர் அரசு மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

2023-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, நீதிமன்றங்களிடமிருந்து கான் பெற்ற மிக முக்கியமான நிவாரணம் தற்போதைய தலையீடு மாத்திரமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது மட்டுமல்லாமல், பல மாதங்களாக அவரால் சந்திக்க முடியாத அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அவரது சகோதரி நொரீன் கான் சிறையில் அவரைச் சந்தித்தார்.

அவரது மற்றொரு சகோதரியான உஸ்மா கான், நேற்று இரவு மருத்துவமனைக்குச் சென்றபோது அவருடன் சென்றிருந்தார்.

வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த மருத்துவப் பரிசோதனையின் அனைத்து நிலைகளிலும் அவர் உடனிருந்தார் என்று தாரார் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கான் இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அனுப்பப்படவிருந்தார்.

எனினும், கான் அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

அதற்குப் பதிலாக அரசு நடத்தும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

அவரது கட்சித் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சூழல்” காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானிய அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.

எனினும் இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று அவரின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தம்முடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவம் கடந்த பெப்ரவரி 28-ம் திகதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அதிஉயர் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு…

46 0 0
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி தீவிரம் : மக்களை தாயர்ப்படுத்தும் ஈரான்!!

ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை…

58 0 0
உலக செய்திகள்

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ!

சீனாவில் ஹியூமனாய்டு ரோபோ போட்டியில் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட சாதனையை தகர்த்துள்ளது ஒரு ரோபோ. நாகரிக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் சக மனிதரை போட்டியாளராக…

49 0 0
உலக செய்திகள்

வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்படும் : ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரானுக்கு எதிரான மிகப்பெரிய நிதிசார் தாக்குதல்களாக ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை திங்களன்று (24) அமுல்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. அதேநேரம், “பொருளாதாரப்…

86 0 0