உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 36 நிமிடங்கள் முன்
65 பார்வைகள்

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘சாகரிகா’ ரயிலுடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் ரயில் பாதையை மறித்து நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி ரயில் பாதையின் போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் தலையிட்டு, ரயில் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதன்பின்னர் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

53 0 0
இலங்கை செய்திகள்

இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்.!

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்…

53 0 0
இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0