உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
82 பார்வைகள்

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின் முக்கிய கட்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலய நிர்வாகத்தினர், அறங்காவலர்கள், பக்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் பக்தி உணர்வுடன் கலந்துகொண்டனர்.

முகூர்த்தக்கால் நாட்டல் உள்ளிட்ட சமய கிரியைகள் ஆகம முறைப்படி இடம்பெற்றதுடன், மஹா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு சமய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

72 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

76 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்.!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வெல்ல வீதிய…

78 0 0