உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெருந்தொகை கஞ்சா கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
67 பார்வைகள்

மொனராகலை, அம்பேகமுவ, கொமகல வீதியின் முனையில் உள்ள மவுஆர எல கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கிருந்து 1044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதன் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 54,096 கஞ்சா செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹன ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0