உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைக்கலவரம் – உயர் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
91 பார்வைகள்

சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்களப் பிரதானிகள், பொலிஸ் மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் வரும் 18ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் விளக்கிய சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றைச் செயற்படுத்த அரசாங்கம் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0