உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலைநாட்டின் பல பகுதிகளில் கன மழை!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
94 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

நுவரெலியா நானுஓயா டயகம அக்கரபத்தனை லிந்துளை தலவாக்கலை மெராயா கொட்டகலை ஹட்டன் டிக்கோயா பொகவந்தலாவ நோர்வூட் புளியாவத்தை மஸ்கெலியா நல்லதண்ணி சாமிமலை வட்டவளை கினிகத்தேன நோட்டன் ஆகிய பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து காட்டாறுகள் ஓடைகள் மற்றும் நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.மேலும் அதிக நீர் வரத்து காரணமாக மலையக பகுதியில் உள்ள மவுஸ்சாகலை காசல்ரீ நீர் தேக்கங்கள் தவிர்ந்த ஏனைய நீர் தேக்கங்களின் நீர் வான் கதவுகள் வழியாக வெளியேறுகிறது.

இதன் காரணமாக களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையை அன்னமித்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் இப் பகுதியில் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக மலையக பகுதியில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் வாகனங்களில் மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நுவரெலியா ஹட்டன் ஹட்டன் கொழுப்பு பிரதான சாலையில் போக்குவரத்து செய்யும் போது வாகனங்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறும் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் திட்டுகள் நிறைந்து காணப்படும் பகுதியில் மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

43 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0