உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இரத்மலானையில் கைக்குண்டு வீச்சுடன் தொடர்புடைய நால்வர் கைது!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
100 பார்வைகள்

இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் (8) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றைய குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தினர், மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே நிலவும் தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கைக்குண்டுத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0