உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
56 பார்வைகள்

2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று முற்பகல் 9.30 மணிக்கு 2,723 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.

வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது.

பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள் மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பிள்ளைகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

57 0 0