உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
66 பார்வைகள்

கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் 28, 46, 53 வயதுடைய பெண்களும், 28 வயதுடைய ஹட்டன் பத்தனப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை 18 ஆம் திகதியன்று வீடு ஒன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய, நேற்று (6) தெஹிவளைப் பகுதியில் இக்குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்களும், ஹட்டன் பத்தன பகுதியில் அந்த குற்றத்திற்கு ஒத்தாசை வழங்கிய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, திருடப்பட்ட 8 ஜோடி தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்க சங்கலிகள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0