உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
49 பார்வைகள்

கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதானமாகப் பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான நீண்டகால விசேட உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளும் நெருங்கிய ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், அபிவிருத்தி ஒத்துழைப்புகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0