உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை நீக்கம்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட  குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசாரால் அதன் ஏற்பாட்டாளரும்,  முன்னாள் வல்வெட்டித்துறை  நகர சபை உப தவிசாளருமான  கந்தசாமி சதீஷ் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று வரை வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.

கடந்த 22/7/2026 அன்று வல்வெட்டித்துறை போலீசாரால் பருத்தித்துறை  நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் மேலும் ஆதாரங்களை  சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் கோரப்பட்டது.

எனினும்  106 சட்ட பிரிவின்கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு  வழங்க முடியாது என்ற அடிப்படையில் இன்றைய தினம் வரை போலீசாருக்கு உரிய எதிராளிக்க எதிரான உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம்  வழங்கப்பட்டிருந்த நிலையில் எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை  நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பதற்கு பருத்தித்துறை நீதவான்  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

43 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0