உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கு ஆளுநருக்கும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சருக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
49 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அப்பகுதியில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்ற போதிலும், வனவளத் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்தார்.

ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்துக் கவனம் செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெ.றஜீவன், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

42 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0