உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
121 பார்வைகள்

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து இன்று (04) இரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0