உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
46 பார்வைகள்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இது குறித்த நிதியியல் தொடர்பான செயலணி (FATF) அறிமுகப்படுத்திய 40 பரிந்துரைகள் தொடர்பான தொழில்நுட்ப சாதக நிலை, அந்தப் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் காணப்படும் 11 உடனடிப் பலன்கள் ஊடாக மதிப்பிடப்படும் செயல்திறனும் இந்த பரஸ்பர மதிப்பீட்டின் போது மதிப்பீடு செய்யப்படுகிறது.

அதற்காக மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வானது இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பரிந்துரைகளை முறையாகச் செயற்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் குறித்த செயல்முறையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மதிப்பீட்டுச் செயல்முறைக்காக இலங்கை 2023 ஆம் ஆண்டு முதல் தயாராகி வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிக் காலக்கெடு விதிக்கப்பட்டு இந்த தயார் நிலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இது தேசிய மட்டத்திலான கணக்காய்வுச் செயல்முறையாவதுடன், இதனை ஆசிய பசுபிக் பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்கிறது.

உள்நாட்டில் இந்தச் செயல்முறைக்காக சுமார் 25 அரச நிறுவனத் தரப்பினர்கள் தொடர்புபடுவதுடன், இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0