உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் வெறும் ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதிகளே.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
36 பார்வைகள்

அரசின் பார்வையில் நாடு ஸ்திரமடைந்து, வளமான நாடும் அழகிய வாழ்க்கையும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம் முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம் சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7 சதவீமாகக் குறைந்துள்ளது. அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும் இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம் குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை, உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித – யானை மோதல்களால் விவசாயிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச் சுமத்தியுள்ளது. அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.

மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளைப் பெற்றுத் தரவில்லை. ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக் குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை.

பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0